Cinepreneurs Who Turned The Spotlight On Coimbatore

Golden Era of Premier Cinetone, Kandhan Studios The success of Swamikannu Vincent buoyed many to enter the world of cinema. A number of producers including Vincent, A.N.Marudachalam Chettiar and P.Ramaswamy had to produce their movies in far away Kolkatta and Mumbai. They did so because the studio owners of Chennai just simply refused to let others make movies in their studios. Those were times when a number of studios like Srinivasa Cinetone founded by A.Narayanan would make their own movies in their own studios. This perhaps egged a couple of…

கோவை மாநகராட்சி சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்கள்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரன பொருட்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் வழியனுப்பிவைத்தார்கள். துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள், நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் அவர்கள், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் பார்வதி, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கஜா புயல் நிவாரனப் பொருட்களை கோவை மாவட்டம் சார்பில் அனுப்ப மாவட்ட ஆட்சி தலைவர் வழிவகை

சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் புயல் நிவாரனப் பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரன பொருட்களை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், கோயம்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வெள்ள நிவாரன பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் ஒப்படைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 0422 2300712

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் புயல் பாதிப்பு மறுசீரமைப்பு IAS அதிகாரிகள் விஷ்ணு, இராஜராம், ஆகியோர் உள்ளனர்.