கோவை ஆசிரியர்களுக்கு நால்லசிரியர் விருது

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறையில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார். அருகில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் உள்ளனர்.