கவிதை நூல் வெளியீட்டு விழா

முனைவர். தி.ஞா. நித்யா அவர்களின் “அப்பாவின் மோதிரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை அடையாறு மைண்ட் ஸோன் வளாகத்தில் நடைபெற்றது, முனைவர் ஜெ. வி. அருண் அவர்கள் வரவேற்பு உரை ஆற்ற, திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பார்வதி, புத்தகத்தை வெளியிட, முனைவர் வ. தனலட்சுமி முதல் பிரதியை பெற்று கொண்டார். முனைவர் மோ. சுஜாதா, டாக்டர். சுனில் குமார், டாக்டர். ஜெயசுதா காமராஜ் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் தி.ஞா. நித்யா நன்றியுரை வழங்கினார். அப்பாவின் மோதிரம் நூலினை சென்னை திருவான்மியூர் தடாகம் பதிப்பகம் வெளியிடுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் புயல் பாதிப்பு மறுசீரமைப்பு IAS அதிகாரிகள் விஷ்ணு, இராஜராம், ஆகியோர் உள்ளனர்.