தமிழக அரசில் பணி

தமிழகத்தில் தற்காலிகமாக 99 பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஸ்கில்டு அசிஸ்டென்ட் கிரேடு மிமி பிரிவில் 87, பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவில் 12 என மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புடன் மெக்கானிக் மோட்டார் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்.சி., (அலைடு ஹெல்த் சயின்ஸ்) அல்லது பி.எஸ்.சி., (பிசிசியன் அசிஸ்டென்ட்) முடித்திருக்க வேணடும்.
வயது: இரு பிரிவுகளுக்கும் 1.7.2020 அடிப்படையில் 18 – 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கல்வி தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புக்கு 40%, என்.டி.சி., சான்றிதழுக்கு 60% கணக்கிடப்படும். பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப்படிப்பு 50%, பிளஸ் 2வில் 30%, பத்தாம் வகுப்புக்கு 20% மதிப்பெண் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ஸ்கில்டு அசிஸ்டென்ட் பதவிக்கு ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250. பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு ரூ. 600. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.
கடைசி நாள்: 16.08.2020
விபரங்களுக்கு: www.mrb.tn.gov.in/

Related posts

Leave a Comment