இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பணி

டில்லியில் உள்ள ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 180 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் சிவில் 15, எலக்ட்ரிக்கல் 15, எலக்ட்ரானிக்ஸ் 150 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: ‘GATE 2019’ மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள் : 2.9.2020 விபரங்களுக்கு: www.aai.aero/sites/default/files/examdashboardadvertisement/GATE%202019%20ADVERTISEMENT_0.pdf

விளையாட்டு வீரர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆபிசர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஆபிசர் 14, கிளார்க் 14 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன. இதில் வில்வித்தை 4, தடகளம் 4, குத்துச்சண்டை 4, ஜிம்னாஸ்டிக் 2, நீச்சல் 4, டேபிள் டென்னிஸ் 2, பளுதூக்குதல் 4, மல்யுத்தம் 4 உள்ளன. வயது: 1.7.2020 அடிப்படையில் 18- 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: கிளார்க் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். விளையாட்டு தகுதி: ஒலிம்பிக், ஆசிய, உலக சாம்பியன்ஷிப், தேசிய, தெற்காசிய உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., எஸ்.டி.,…

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 4182 காலியிடங்கள்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம் : வடக்கு 228, மும்பை 764, மேற்கு 1579, கிழக்கு 716, தெற்கு 674, மத்தியில் 221 என மொத்தம் காலியிடங்கள் உள்ளன. இதில் சென்னையில் 72 இடங்கள் உள்ளன. வயது : 17.8.2020 அடிப்படையில் 18- 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : சில பதவிகளுக்கு ஐ.டி.ஐ., சில பதவிகளுக்கு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். கடைசி நாள் : 17.8.2020 விபரங்களுக்கு : https://www.ongcindia.com/

காவல் படையில் 5846 பணியிடங்கள்

டில்லி போலீசில் கான்ஸ்டபிள் பதவியில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: கான்ஸ்டபிள் (எக்சிகியூட்டிவ்) – ஆண் 3902, கான்ஸ்டபிள் (பெண்) 1944 என மொத்தம் 5846 இடங்கள் உள்ளன. வயது: 1.7.2020 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு (ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்) மற்றும் மருத்துவ சோதனை தேர்வு. எழுத்துத்தேர்வு தேதி: 2020 நவம்பர் 27- டிசம்பர் 14. இதர தகுதி: ஆண்கள் குறைந்தது உயரம் 170 செ.மீ., பெண்கள் 157 செ.மீ., இருக்க வேண்டும்.…

ராணுவத்தில் சேர வாய்ப்பு

டேராடூன் இந்திய மிலிட்டரி அகாடமியில் 132வது டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சிவில் 10, ஆர்க்கிடெக்சர் 1, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 9, எலக்ட்ரானிக்ஸ் 6, ஏரோனாட்டிக்கல் 2, ஏரோஸ்பேஸ் 1, நியூக்ளியர் டெக்னாலஜி 1, ஆட்டோமொபைல் 1, லேசர் டெக்னாலஜி 1, இன்டஸ்ட்ரியல் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன. வயது: 1.1.2021 அடிப்படையில் 20 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: தொடர்புடைய பிரவில் பி.இ., அல்லது பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். கடைசிநாள்: 26.8.2020 விபரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/