விளையாட்டு வீரர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆபிசர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஆபிசர் 14, கிளார்க் 14 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன. இதில் வில்வித்தை 4, தடகளம் 4, குத்துச்சண்டை 4, ஜிம்னாஸ்டிக் 2, நீச்சல் 4, டேபிள் டென்னிஸ் 2, பளுதூக்குதல் 4, மல்யுத்தம் 4 உள்ளன.
வயது: 1.7.2020 அடிப்படையில் 18- 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி: கிளார்க் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.
விளையாட்டு தகுதி: ஒலிம்பிக், ஆசிய, உலக சாம்பியன்ஷிப், தேசிய, தெற்காசிய உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50.
கடைசி தேதி: 16.8.2020
விபரங்களுக்கு: https://bankofindia.co.in/pdf/BOISPORTSPERSONSADVT3072020.pdf?tbclid=IwARO6HyGcJyKWWOG2iP2tvFWYOrvUudVCMUGKXHy5q-3m4mwsml7E6SIVk78

Related posts

Leave a Comment