என்.சி.இ.ஆர்.டி., யில் 266 பேராசிரியர் வாய்ப்பு

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 266 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், வரலாறு, வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உடற்கல்வி, புவியியல், நூலகர், உணவு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பிரிவுகளில் பேராசிரியர் 39, இணை பேராசிரியர் 83, உதவி பேராசிரியர் 144 என மொத்தம் 266 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது.
வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முக தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசி நாள்: 03.08.2020
விபரங்களுக்கு: http://recruitment.ncert.gov.in/

Related posts

Leave a Comment