ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 2, ஐ.டி. ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ. 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6, என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.8.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், புராஜக்ட் அட்மின், நெட்வொர்க் அட்மின் பதவிக்கு 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 30 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. பணிக்காலம்: குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள். ஊதியம்: ஆண்டு ஊதியம் ரூ. 28.20…

ரசாயன நிறுவனத்தில் 393 காலியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரசாயன மற்றும் உர நிறுவனத்தில் 393 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி 60, பாய்லர் 21, மெக்கானிக்கல் 48, எலக்ட்ரிக்கல் 22, இன்ஸ்ட்ரூமென்டேசன் 35, இன்ஜினியர் (கெமிக்கல்) 10, ஆபிசர் (மார்க்கெட்டிங்) 10, அசிஸ்டென்ட் ஆபிசர் (மார்க்கெட்டிங்) 14, ஆப்பரேட்டர் டிரைய்னி (கெமிக்கல்) 125, பாய்லர் ஆப்பரேட்டர் 25, ஜூனியர் பயர்மேன் 23 என மொத்தம் 393 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும். எழுத்துத்தேர்வு தேதி: 16.8.2020. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: சில பிரிவுகளுக்கு ரூ.1000. மற்ற பிரிவுகளுக்கு ரூ.750. கடைசிநாள்: 15.7.2020. விபரங்களுக்கு: www.rcfltd.com/files/Final%20web%20advt%2022-24nd%20June%202020.pdf

விமானப்படையில் சேர விருப்பமா?

இந்திய விமானப்படையில் 256 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிளையிங் 74, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் 105 மற்றும் நான் டெக்னிக்கல் 55), வானிலை ஆய்வு 22 என மொத்தம் 256 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு. தேர்வு தேதி: 19 மற்றும் 20.9.2020. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலுார். விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. கடைசிநாள்: 14.7.2020. விபரங்களுக்கு : https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/06/indian-airforce-alcat-02-2020-online-form-advt-detailsd4b741.pdf  

ஸ்டேட் வங்கியில் 326 பணியிடங்கள்

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் 326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: எக்சிகியூட்டிவ் (எம்.ஐ., & எம்.எம்) 241, சீனியர் எக்சிகியூட்டிவ் (சோசியல் பேங்கிங் & சி.எஸ்.ஆர்.,) 85 என மொத்தம் 326 காலியிடங்கள் உள்ளன. வயது: எக்சிகியூட்டிவ் 30, சீனியர் எக்சிகியூட்டிவ் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு கிராம பொருளாதாரம் / விவசாயம் / தோட்டக்கலை பிரிவில் நான்காண்டு இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் எக்சிகியூட்டிவ் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.) கடைசிநாள்: 13.7.2020. விபரங்களுக்கு : https://www.sbi.co.in/web/careers/current-openings  

ஸ்ரீ அத்தி வரதர்

நாம் அனைவரும் வியப்பாக தற்போது பார்த்து வரும் கோயில்களில் ஒன்றாக மாறி உள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். இங்குள்ள அத்தி வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் உருவாக்கினார். அத்திவரதர் தற்போது திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவராக இருக்கும் வரதராஜ பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவர் பழைய சீவிரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜ பெருமாள் என கூறப்படுகின்றது. இதுகுறித்து கூறப்படும் புராணக்கதை விவரம் வருமாறு:- ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப்பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைப்பெற ஒரு யாகம் மேற்கொண்டார்.…

Welcome Back Modiji To Make India Stronger

By SHEFA RAFI It’s not unusual for people to expect something new whenever a new government comes to power. However, this time expectations are high as far as electorate are concerned. Having been gifted with a second term with a massive mandate, Modiji has a greater responsibility to fulfill the promises made by him during his earlier tenure. And its heartening to infer from Modiji’s address at BJP headquarters soon after the results that BJP is committed to Indian Constitution assuring the electorate that Central government is a party to…

It’s Thumbs-Up For Piyush Goyal’s People-Friendly Budget

By SHEFA RAFI As expected, the BJP government came out with some heart-warming announcements in the budget presentation targeting salaried class and farmers. Thanks to Piyush Goyal, chartered accountant turned Union Finance Minister incharge for his people-friendly budget with tax exemptions to middle class and sops to farmers besides monthly pension to workers belonging to unorganised sector. Perhaps, it’s a path-breaking initiative to announce Rs.6000 per annum to be distributed in three instalments to farmers owning under 2 hectares while workers in unorganised sector to get Rs.3000 per month. To…

கவிதை நூல் வெளியீட்டு விழா

முனைவர். தி.ஞா. நித்யா அவர்களின் “அப்பாவின் மோதிரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை அடையாறு மைண்ட் ஸோன் வளாகத்தில் நடைபெற்றது, முனைவர் ஜெ. வி. அருண் அவர்கள் வரவேற்பு உரை ஆற்ற, திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பார்வதி, புத்தகத்தை வெளியிட, முனைவர் வ. தனலட்சுமி முதல் பிரதியை பெற்று கொண்டார். முனைவர் மோ. சுஜாதா, டாக்டர். சுனில் குமார், டாக்டர். ஜெயசுதா காமராஜ் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் தி.ஞா. நித்யா நன்றியுரை வழங்கினார். அப்பாவின் மோதிரம் நூலினை சென்னை திருவான்மியூர் தடாகம் பதிப்பகம் வெளியிடுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் புயல் பாதிப்பு மறுசீரமைப்பு IAS அதிகாரிகள் விஷ்ணு, இராஜராம், ஆகியோர் உள்ளனர்.