பொதுமக்கள் வருவாய்துறை சான்றிதழ்களை 24×7 நேரமும் இசேவை திறந்தவெளி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 212 பொது சேவை இசேவை மையங்கள் மூலமாக தற்போது 20 வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ்கள் பெறுவதற்கு நெருக்கடியான காலம் என்பதால் பொது சேவை மையங்களில் நெருக்கடி ஏற்படுகின்றது. பொது சேவை மையங்கள் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இக்காரணத்தினால் மற்ற நேரங்களில் பொது மக்கள் சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/citizen/ என்ற திறந்தவெளி இணையதள முகவரியை பயன்படுத்தி 24×7 நேரமும் கீழ்கண்ட 20 வருவாய்துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தப்படியே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
1. விவசாய வருமான சான்றிதழ், 2. வாரிசு சான்றிதழ், 3. குடிபெயர்வு சான்றிதழ், 4. சிறுகுறு விவசாயி சான்றிதழ், 5. வசிப்பிட சான்றிதழ், 6. ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், 7. கலப்பு திருமண சான்றிதழ், 8. சொத்து மதிப்பு சான்றிதழ், 9. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், 10. விதவை சான்றிதழ், 11. அடகு வணிகர் உரிமம், 12. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், 13. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், 14. கடன் கொடுப்போர் உரிமம், 15. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், 16. வருமான சான்றிதழ், 17. இருப்பிட வசிப்பிட சான்றிதழ், 18. ஜாதி சான்றிதழ், 19. முதல் பட்டதாரி என்பதற்கான சான்றிதழ், 20. கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ்.
இதற்கான சேவை கட்டணமாக ரூ.60ஐ இணையதள வங்கிமுறை (கிரிடிட்/டெபிட் கார்டு) மூலமாக செலுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment