கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரன பொருட்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் வழியனுப்பிவைத்தார்கள். துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள், நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் அவர்கள், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் பார்வதி, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Category: Coimbatore
கஜா புயல் நிவாரனப் பொருட்களை கோவை மாவட்டம் சார்பில் அனுப்ப மாவட்ட ஆட்சி தலைவர் வழிவகை
சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் புயல் நிவாரனப் பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரன பொருட்களை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், கோயம்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வெள்ள நிவாரன பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் ஒப்படைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 0422 2300712
கோவையின் புதிய போலீஸ் கமிஷ்னர் சுமித் சரண்
கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷ்னர் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். கோவை மாநகர போலீஸ் கமிஷ்னராக பணி புரிந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐ ஜி யாக நியமிக்கப்பட்டார். சென்னை அமலாக்க பிரிவு ஐ ஜி யாக பணி புரிந்த சுமித் சரண் கோவையின் புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்று கொண்ட இவர், நிருபர்களுக்கு கூறியதாவது. மாநகரில் போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான குற்ற செயல்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்பவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதி மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் 100% மின்னணு முறையில் அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு தனிக்கவனம்…
பருவ மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன
கோவை மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்தில் பருவ மழையை எதிர்நோக்கி, அனைத்து வட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளைக் கண்காணிக்கவும், மழையால் பாதிப்பு ஏற்படும்போது தேவையான பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வட்டாட்சியரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க, உடனடியாக நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற தொலைபேசி கட்டணமில்லா எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு அலுவலரை தொடர்பு கொள்ள: கோவை தெற்கு வட்ட கண்காணிப்பு அலுவலரை…
கோயம்புத்தூர் மாவட்டத்தை நெகிழியில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டுகோள்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, அவர்கள் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை உரிமையாளரர்கள், உணவு வணிக சங்கங்கள், குடிநீர் பேக்கிங் உற்பத்தியாளர்கள், நெகிழி உற்பத்தியாளர்கள், நடைபாதை கடை உரிமையாளர்களுடன் நெகிழி ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்/அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை சமநிலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் 01.01.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் தடை உத்தரவினை சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தினை தடுக்க மாவட்ட…
