கோவை மாவட்டத்தில் 28.5 லட்சம் வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 28.5 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
‘இறுதி வாக்காளர் பட்டியல் கோட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதை பொதுமக்கள் பார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்த்து கொள்ளலாம்.
பெண் வாக்காளர்கள் அதிகம்: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேர். பெண்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேர், மூன்றாம் பாலினத்தவர் 311 பேர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் பேர் உள்ளனர். மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 8 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மொத்தத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

 

Related posts

Leave a Comment