ரசாயன நிறுவனத்தில் 393 காலியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரசாயன மற்றும் உர நிறுவனத்தில் 393 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி 60, பாய்லர் 21, மெக்கானிக்கல் 48, எலக்ட்ரிக்கல் 22, இன்ஸ்ட்ரூமென்டேசன் 35, இன்ஜினியர் (கெமிக்கல்) 10, ஆபிசர் (மார்க்கெட்டிங்) 10, அசிஸ்டென்ட் ஆபிசர் (மார்க்கெட்டிங்) 14, ஆப்பரேட்டர் டிரைய்னி (கெமிக்கல்) 125, பாய்லர் ஆப்பரேட்டர் 25, ஜூனியர் பயர்மேன் 23 என மொத்தம் 393 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும். எழுத்துத்தேர்வு தேதி: 16.8.2020. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: சில பிரிவுகளுக்கு ரூ.1000. மற்ற பிரிவுகளுக்கு ரூ.750. கடைசிநாள்: 15.7.2020. விபரங்களுக்கு: www.rcfltd.com/files/Final%20web%20advt%2022-24nd%20June%202020.pdf

விமானப்படையில் சேர விருப்பமா?

இந்திய விமானப்படையில் 256 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: பிளையிங் 74, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் 105 மற்றும் நான் டெக்னிக்கல் 55), வானிலை ஆய்வு 22 என மொத்தம் 256 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு. தேர்வு தேதி: 19 மற்றும் 20.9.2020. தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலுார். விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. கடைசிநாள்: 14.7.2020. விபரங்களுக்கு : https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/06/indian-airforce-alcat-02-2020-online-form-advt-detailsd4b741.pdf  

ஸ்டேட் வங்கியில் 326 பணியிடங்கள்

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் 326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: எக்சிகியூட்டிவ் (எம்.ஐ., & எம்.எம்) 241, சீனியர் எக்சிகியூட்டிவ் (சோசியல் பேங்கிங் & சி.எஸ்.ஆர்.,) 85 என மொத்தம் 326 காலியிடங்கள் உள்ளன. வயது: எக்சிகியூட்டிவ் 30, சீனியர் எக்சிகியூட்டிவ் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு கிராம பொருளாதாரம் / விவசாயம் / தோட்டக்கலை பிரிவில் நான்காண்டு இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். சீனியர் எக்சிகியூட்டிவ் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.) கடைசிநாள்: 13.7.2020. விபரங்களுக்கு : https://www.sbi.co.in/web/careers/current-openings