கோவை கெமிஸ்ட்ரி அகாடமியில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்

– CBSE / STATE BOARD / IB / IGCSE / ICSE BOARD மாணவர்களுக்கு கெமிஸ்ட்ரியில் தனிப்பயிற்சி.
– IXவது, Xவது மாணவர்களுக்கு அறிவியல் பாடம்
– XIவது, XIIவது வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் பயிற்சி
– மதிப்பெண்கள் பெறவும் / பாடத்தில் நல்ல திறமையுடன் புரிந்து படிக்கும் வகையில் பயிற்சி
– பலன் கிடைக்கும் வகையில் பயிற்சி
கோவை சாய்பாபா காலனி, 8 வது வீதி, K. K புதூரில் 49 வது இல்லத்தில் (Opp to Health Care Pharmacy) மாரியம்மன் கோவில் அருகில் கெமிஸ்ட்ரி அகாடமி 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவிகா அவர்கள் பயிற்சியாளராக பயிற்றுவித்து வருகிறார். இவர் M. Sc, M.Phil, B.Ed பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைகழகத்தில் பயின்றவர். முதுகலையில் யூனிவர்சிட்டி முதல் மாணவராக வந்து தங்க பதக்கம் பெற்றவர்.
இதுவரை நேரடி பயிற்சி மட்டுமே அளித்து வந்த நிறுவனம் இப்பொழுது ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சிகள் அளிக்கிறது.
இதுவரை சுமார் 15000 மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளித்துள்ளனர். இங்கு எந்த மாணவரும் வேதியியல் எளிதில் புரிந்து, விருப்பத்துடன் படிக்கும் வகையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் நன்றாக மதிப்பெண் பெறும் வகையிலும் தனிப்பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவருடைய உளவியல் ரீதியாக பகுத்தறிந்து அவர்கள் விரும்பி கற்கும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
இது குறித்து தேவிகா அவர்கள் கூறுகையில் கெமிஸ்ட்ரி அகாடமி 1998 முதல் மாணவர்கள் வேதியியலை விரும்பி கற்கும் வகையிலும், மேற்படிப்பிற்கும், வேலைக்கும் பயன் தரும் வகையிலும் தகுதியான கல்வியை ஒவ்வொரு மாணவரும் பயன் பெறும் வகையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவரை நேரடியாக பயிற்சி அளித்து வந்த நாங்கள் இப்பொழுது ஆன்லைனிலும் பயிற்சி அளிக்கின்றோம். 9ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலும், 11ம், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியலும் பயிற்சி அளிக்கின்றோம்.
பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் பொழுது முதலில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என அறிந்து கொள்வது அவசியம். படிப்பது தேர்விற்காக மட்டும் அல்ல என அவர்களுக்கு உளவியல் ரீதியாக புரிய வைத்து தகுதியும் திறமையும் மட்டுமே எதிர்காலத்தில் வேலை செய்யும் பொழுது பயன்படும் என புரிய வைத்து அத்தகைய திறமையை உருவாக்க வேண்டும் என உளவியல் ரீதியாக அவர்களை தயார்படுத்த வேண்டும்.
அடுத்ததாக மாணவர்கள் கடத்த காலத்தில் அறிவியல் பாடத்தில் முழுமையான அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே இன்றைய கல்வியை புரிந்து கொள்ள இயலும். அத்தகைய குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கலைவது என சிந்திக்க வேண்டும். மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து வேறு வகையான சிதறல்கள் இருக்கிறதா என அறிய வேண்டும். அவ்வாறு இருப்பின் அதையும் சரி செய்ய வேண்டும். குறிக்கோளை நிர்ணயிக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் எளிமையாக சிறப்பாக வேலையை எப்படி செய்து முடிப்பது என பயிற்சி அளிக்க வேண்டும். எப்படி மற்ற எல்லா பாடங்களையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்வது என்பதையும் அத்துடன் பொழுதுபோக்கு, சமுதாய தொடர்புகளையும் சரியாக பேண பயிற்சி வேண்டும்.
மாணவர்கள் எதையும் இழந்துவிட்டதாக நினைக்காமல் கல்வியையும் இழந்து விடாமல் இருக்கும்படியான நிலையை உருவாக்க வேண்டும். இவை அனைத்துடன் உடல் நலனையும், மண ஆரோக்கியத்தையும் உருவாக்கும் படியான கல்வியே சிறந்த கல்வியாகும்.
மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்வது, படிப்பது, தகுதியுடையவராவது வேறு, மதிப்பெண் பெறுவது வேறு. நல்ல மதிப்பெண்களை பெற கேள்விகளை புரிந்து கொள்வது, அழகிய கையெழுத்தில் எழுதுவது, குறிப்பிட்ட காலத்தில் எழுதுவது, மதிப்பெண்ணிற்கு தேவையான அளவில் எழுதுவது. எழுதிய பின்பு திரும்பி பார்ப்பது, பல முறை எழுதி எழுதி பார்ப்பது என்ற கலவைகளாகும். மனதை தேர்வின் பொழுது சமநிலையில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறோம் பாடத்தை புரிந்து படித்து திறமையுடையவராவது வேறு, பரிட்சையில் மதிப்பெண் பெறுவது வேறு. இரண்டு கலையும் இணைந்து பயிற்சி பெற்றால் மட்டுமே towards 100% சாத்தியம்.
எங்களது நிறுவனத்தின் லட்சியமே Towards 100% எல்லா விசயத்திலும். இப்படி படித்தால் மட்டுமே ஒவ்வோரு வருடமும் எங்களுடைய நிறுவனத்தில் நிறைய மாணவர்கள் 100% மதிப்பெண் பெறுவதுடன் மேற்கல்வியிலும், வேலை செய்யும் இடத்திலும் வேதியியல் இனிமையாக இருப்பதாக கூறுகிறார்கள். அத்துடன் வேதியியலை வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு ஆசிரியராகவும், பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் பலநூறு பேர் இருப்பதே எங்களுடைய சாதனையாக நாங்கள் கருதுகிறோம் என கூறினார்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் 98430-64149, 98423-06048 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

Leave a Comment