கோவை பிராந்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம்

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) கோவை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கோவை பிராந்திய அலுவலகத்தில் மூத்த புலனாய்வு அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஏ.சண்முகராஜ்.
இவருடைய சிறந்த சேவையை பாராட்டி ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சண்முகராஜ் கோவை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கம், கேட்டமைன் என்ற போதை பொருட்களை ஏராளமான அளவில் பறிமுதல் செய்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள 150 கிலோ தங்கம், ரூ.97 கோடி போதை பொருள், ரூ.9 கோடிக்கு செம்மரங்கள், ரூ.2 கோடி எலக்டிரானிக் பொருட்கள், ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் மற்றும் ரூ.30 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஏ.சண்முகராஜ் முக்கிய பங்கு வகித்துள்ளார், மேலும் கோவை பிராந்தியத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ததில் ரூ.100 கோடிக்கு நடந்த முறைகேடுகளில் ரூ.74 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஏ.சண்முகராஜ் இதுவரை 60 பேரை கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment