புதிய கொடிசியா தொழிற்பூங்கா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், மோப்பிரிபாளையம், கொடிசியா தொழிற்பூங்காவில் நடைபெற்ற விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் மற்றும் கொடிசியா இண்டஸ்டிரியல் பார்க் லிமிடெட் சார்பில் மோப்பிரிபாளையம் மற்றும் கள்ளப்பாளையத்தில் புதிய கொடிசியா தொழிற்பூங்காக்களை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். உடன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பென்ஜமின், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) துரை.இரவிச்சந்திரன், கொடிசியா தலைவர் ஆர். இராமமூர்த்தி, கொடிசியா இண்டஸ்டிரியல்பார்க் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. வரதராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment