கோ-ஆப்டெக்ஸ்-ல் சிறப்பு விற்பனை: “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்”

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக கைக்கறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உக்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் ஆண்டுதோறும் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” சிறப்பு விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுபுடவை வரை அனைத்து இரகங்களுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் இரண்டு வாங்கினால் கூடுதலாக ஒன்று இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர் வாங்கும் இரண்டாவது இரகத்திற்குரிய விலைக்குள் அவர்கள் விரும்பும் வேறு எந்த இரகங்களையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இச்சிறப்பு விற்பனை 28.03.2020 வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, கஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு வகைகள் பருத்தி சட்டைகள், ஸ்லப் சட்டைகள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகக் தருவிக்கப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment