தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு —தமிழக அரசு அறிவிப்பு
Author: Kovai Metro
கோவை மெட்ரோவின் இன்றைய கொரோனா செய்தி (30.7.2020) – Coimbatore – Corona Status Update – KOVAI METRO
மத்திய அரசில் வேலை
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 121 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: மெடிக்கல் ஆபிசர் (ஓமியோபதி) 36, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 3, உதவி பேராசிரியர் 60, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 21, ஆர்க்கிடெக் 1 என மொத்தம் 121 காலியிடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 13.8.2020. விபரங்களுக்கு: https://upsconline.nic.in/
ராணுவத்தில் 300 காலியிடங்கள்
ராணுவத்தில் உள்ள மருத்துவ பிரிவில் 300 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் – 270 ஆண், 30 பெண் என மொத்தம் 300 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: 30.6.2020ம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ்., படிப்புடன் பயிற்சியையும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 31.12.2020 அடிப்படையில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. இது 31.8.2020ல் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. கடைசிநாள்: 16.8.2020. விபரங்களுக்கு: www.amcsscentry.gov.in/
தமிழக அரசில் பணி
தமிழகத்தில் தற்காலிகமாக 99 பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: ஸ்கில்டு அசிஸ்டென்ட் கிரேடு மிமி பிரிவில் 87, பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவில் 12 என மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புடன் மெக்கானிக் மோட்டார் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்.சி., (அலைடு ஹெல்த் சயின்ஸ்) அல்லது பி.எஸ்.சி., (பிசிசியன் அசிஸ்டென்ட்) முடித்திருக்க வேணடும். வயது: இரு பிரிவுகளுக்கும் 1.7.2020 அடிப்படையில் 18 – 58 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வி தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புக்கு 40%, என்.டி.சி., சான்றிதழுக்கு 60% கணக்கிடப்படும். பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப்படிப்பு 50%, பிளஸ் 2வில் 30%,…
என்.சி.இ.ஆர்.டி., யில் 266 பேராசிரியர் வாய்ப்பு
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 266 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், வரலாறு, வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உடற்கல்வி, புவியியல், நூலகர், உணவு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பிரிவுகளில் பேராசிரியர் 39, இணை பேராசிரியர் 83, உதவி பேராசிரியர் 144 என மொத்தம் 266 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முக தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. கடைசி நாள்: 03.08.2020 விபரங்களுக்கு: http://recruitment.ncert.gov.in/
புள்ளியியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு
யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு, புள்ளியியல் உதவியாளர் பதவியில் 11 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடம்: புனே, கொல்கட்டா, பெங்களூரு, கவுகாத்தி, போப்பால் மற்றும் ஐதராபாத். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்ப கட்டணம் இல்லை. முகவரி: The Secretary, University Grants Commission, Bahadurshah Zata Marg, New Delhi – 110 002. கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க 17.08.2020. உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப 24.08.2020. விபரங்களுக்கு: www.ugc.ac.in/
ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 2, ஐ.டி. ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ. 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6, என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.8.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், புராஜக்ட் அட்மின், நெட்வொர்க் அட்மின் பதவிக்கு 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 30 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. பணிக்காலம்: குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள். ஊதியம்: ஆண்டு ஊதியம் ரூ. 28.20…
கோவை மெட்ரோவின் இன்றைய கொரோனா செய்தி (28.7.2020) – Coimbatore – Corona Status Update – KOVAI METRO
கோவை மெட்ரோவின் இன்றைய கொரோனா செய்தி (27.7.2020) – Coimbatore – Corona Status Update – KOVAI METRO
கோவை மெட்ரோவின் இன்றைய கொரோனா செய்தி (27.7.2020) – Coimbatore – Corona Status Update – KOVAI METRO
